செவ்வாய், 27 அக்டோபர், 2015



என் செய்வாய் என் விதையே !
கனியே ! அமுதே !

என் மரமும் வேரும்
எனக்களித்த வீரியத்தை
முழுவதுமாய் உமக்கு
 மாற்றிட நான் முயல்கையில்
இங்கொன்றும்  அங்கொன்றுமாய்
அல்ல எங்கெங்கும் முளைவிடும்
இடையூறுகளை என் செய்வாய்
என் விதையே !கனியே !அமுதே !

நல்லதென்றும்  தீயதென்றும்
நஞ்சென்றும் அமுதென்றும்
அம்மையென்றும் அப்பனென்றும்
இருளென்றும் ஒளியென்றும்
இனிப்பென்றும் கசப்பென்றும்
எதிகொள்ள நேரிடுமே
இடர் வந்து சேருமே _என்செய்வாய்
என் விதையே !கனியே!அமுதே!


ஆலகால  விஷத்தை
பரமசிவன் பருகிட அங்கு
வந்த பார்வதி கழுத்தை நெருக்கி
காத்தது  போல்
உனக்கு என்னால் செய்ய முடியும் என்றோ
 ஆகாசத்தை வில்லாக வளைத்திட
துணை நிற்பேன் என்றோ
எந்த வாக்குறுதியும் தந்துவிட
முடியாது என்னால்
பழுத்த பழமொன்று
கோலுன்றி கண்பார்த்து
வழி கிடக்கும் முள்ளை
மலர்களாக்க  முடியாமல்
 முள்ளென சொல்லி ஒதுக்கி
பாதையக்குவதை தவிர
வேறென்ன செய்துவிட முடியும்
என்னால் _என் விதையே
கனியே!அமுதே!

எனக்கான என்னை
நான் தேடிகொண்டிருக்கையில்
உன்னை மீட்டெடுத்து
எம்மை ரட்சிப்பாய
என் விதையே கனியே அமுதே

வாழ்க்கை எனக்களித்த
பரிசை ஆகசிறப்பாக பதப்படுத்தி
வாழ்க்கை எனக்களித்த  கசப்பை மருந்தாக்கி
நோய் தீர்ப்பது தவிர
வேறென்ன செய்துவிட முடியும் என்னால்
என் விதையே !கனியே!அமுதே!

வான்நோக்கி நாம்
பறக்கையில்  வழிமறிக்கும்
மண்புழுக்கள் தரைதான்
சொர்க்கமென வேதம் ஒதிடுமே என் செய்வாய்
என் விதையே! கனியே! அமுதே!

ஆர்பரிக்கும் கடல் அலையின்
பேரமைதியும்  சலசலக்கும்
ஓடையின் ஆர்பரிப்பையும்
உன் சட்டை பையில் நான்
திணிக்கையில் காட்டாற்று
வெள்ளமொன்று நம்
கனவுகளை களவாடிவிடுமே
என் செய்வாய் செய்வாய்- என் விதையே!
கனியே! அமுதே!

என் செய்வாய்
என் விதையே! கனியே! அமுதே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக